அணிந்து வந்த
நாகரீக வேடமும்
மறந்துவிட்ட
மனித மாண்புகளும்
மிருகம் ஆக்கிற்று
அன்று அவரை...!
தன் தோழியுடன்
விளையாட்டில்
தொலைந்து போய்
தன்னை அறியாது
அவர் மேல்
விழுந்ததில்
தூக்கி ஏறியப்பட்டு
துடி துடித்த
நாய் குட்டி...!
வர்ணனைகள்
கலைந்த முகம்
கண்களில்
வழிந்தோடிய கண்ணீர்
துடிக்கின்ற
தன் தோழனை
வாரி அனைத்துக்கொண்ட
சிறுமி...!
அன்று வாடிய கொடிக்கு
தேர் கொடுத்தோம்
இன்று சலவை செய்த
ஆடைக்குள்
அழுகிய மனங்கள்
வளர்க்கிறோம்
நாகரீகம்
என்று சொல்லி...!