இருகண்ணும்
தொலைந்து போகும்
மை இருட்டு
இடைவிடாது
கொட்டிச் சென்ற
கோடை மழை...!
தீண்டிய நாகத்தின்
திசையறியா
திகைப்பு - அங்கே
வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
உருவாக்கிய சலசலப்பு...!
யாருமற்ற சாலைகள்
எமனது வருகையென
ஓலமிட்ட
மக்கள் கூட்டம்...!
தோகையின்றியும்
வாசல் வந்த
தேவதை - துடைத்துச்
சென்ற கண்ணீர்
துளிகள்...!