Wednesday, 17 September 2014

நேர்மறை

பனி மூடிய சூழ்நிலையில்
     முழு முகம் காட்டிய
கதிரவனின்
      கதிர் வீச்சு...!

மை இருட்டில்
      மண் விளக்கில்
ஏற்றப்பட்ட
      தீப ஒளி...!

அநீதியை கண்டு
      நடுங்கி நின்ற
கூட்டத்திலிருந்தும்
      கல்லெறிந்த
சிறுவனின்
      மன எழுச்சி...!

உள்ளொன்று வைத்து
     புறமொன்று பேசும்
உறவு
     கொள்ளாமை…!

கடந்து வந்த
       தவறுகளில் வாழக்
கற்றுக்கொண்ட
       அறிவு...!

எறியப்பட்ட கற்கள்
      வாழ்வின் படிகளாய்
மாறுகின்ற
       வரம்...!